கூட்டுறவு வீட்டுவசதித்துறை அரசாணை எண்.641, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித்துறை, நாள் 12.4.1979-ன்படி 1979-ஆம் வருடத்திலிருந்து செயல்பட்டு வருகிறது.
கூட்டுறவு வீட்டுவசதித்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் அந்தஸ்தில் கூட்டுறவு துறையின் மூலம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (வீட்டுவசதி) நியமிக்கப்பட்டு துறை தலைவராக செயல்பட்டு வருகிறார்.
கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் அந்தஸ்தில் கூட்டுறவு துறையின் மூலம் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத்திற்கு மேலாண்மை இயக்குநர் நியமிக்கப்பட்டு இவரது தலைமையின் கீழ் இணையம் செயல்பட்டு வருகிறது.