முதன்மை வீட்டுவசதி சங்கங்களின் செயல்பாடுகள்மனைத்திட்டங்கள் செயல்படுத்துதல் :

1991ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தாராளமயமாக்கல் சகாப்தம் வரை 644 எண்ணிக்கையில் தளவமைப்பு திட்டங்கள் முதன்மை தமிழ்நாடு வீட்டுவசதி சங்கங்களினால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு மாநிலத்தின் நகரமயமாக்களுக்கு வழிவகுத்தது.

ஏறக்குறைய மாநிலத்தில் உள்ள நகரங்கள் பெரும்பாலும் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று வகையான மனைத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

➢ சங்கங்கள் சொந்தமாக திட்டங்களை செயல்படுத்துதல்:

சங்கங்கள் உறுப்பினர்களிடமிருந்து பெற்ற தொகைகளைக் கொண்டு, மனைகளை கொள்முதல் செய்து அதனை மேம்படுத்தி உறுப்பினர்களுக்கு விற்பனை செய்து வருவது. இச்செயல்பாடு ஆரம்ப காலம் முதல் பொருளாதார தாராளமயமாக்குதல் வரை செயல்பட்டுள்ளது

➢ ஒப்படைப்பு முறை:

சங்கங்களுக்கு பதிலாக, ஒப்படைப்பு முறையில் (Consignment) மனை மேம்பாட்டாளர்களிடமிருந்து மேம்படுத்தப்பட்ட மனைகளை பெற்று அதனை சங்கத்தின் மூலம் சங்கத்திற்கு விளிம்புத் தொகை நிர்ணயம் செய்து உறுப்பினர்களுக்கு விற்பனை செய்தல். இச்செயல்பாடு தோராயமாக 1991 முதல் 2015 வரை நடைமுறையில் இருந்து வருகிறது.

➢கூட்டு முயற்சி திட்டம்:

சங்கம் மற்றும் மனை மேம்பாட்டாளர் இணைந்து மனைகளை மேம்படுத்தி அதனை சங்கத்தின் பெயரில் விற்பனை செய்வது. இதுவும் தற்போது நடைமுறையில் உள்ளது.

இந்த மூன்று வகையான திட்டங்களும் தமிழ்நாடு மாநிலத்தின் நகரமயமாக்குதலின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது.

இதேபோல், வட்டக் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் நகர்ப்புரம் மற்றும் கிராமப்புரங்களில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் குறைந்த வருவாய் பிரிவு, மத்திய வருவாய் பிரிவு மக்களுக்கு வீட்டுவசதி இணையம் மூலம் பெறப்பட்ட கடன்களை வழங்குவதில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.

முதன்மைக் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் செயல்பாடுகள்:

நகர்ப்புரக் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அதன் அடுத்த திட்டம் வரை செயல்பாடற்ற நிலையில் (hibernation) இருந்து சமூகத்திற்கு சேவை செய்யும் அடிப்படையில் சேவை சங்கங்களாக செயல்பட்டு வருகிறது. மேலும், நகர்ப்புர மற்றும் வட்டச் சங்கங்களில் மனைத்திட்டங்கள் செயல்படுத்தாத சங்கங்கள் பொது மக்களிடமிருந்து வைப்பீடுகள்பெற்று நகர்ப்புரம் மற்றும் கிராமப்புரங்களில் வசிக்கும் மக்களுக்கு கட்டுமானக்கடன், அடமானக்கடன் மற்றும் வைப்பீடுகளின் பேரில் கடன்களாக தங்கள் விவகார எல்லைக்குள் வழங்கி வருகிறது. இச்சங்கங்கள் தங்களை பல்வகை கடன் வழங்கும் சங்கங்களாக மாற்றிக்கொண்டு பாதுகாப்பான நகைக்கடன் வழங்கி வருகிறது.


இணையம் மற்றும் அனைத்து சங்கங்கள் தமிழ்நாடு கூட்டுறவு தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல் மூலம் 2013 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழுவினால், அனைத்தும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. தற்போது 679 முதன்மைச் சங்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழுவினாலும், 22 சங்கங்கள் மண்டல துணைப்பதிவாளர்கள் (வீட்டுவசதி) மூலம் நியமனம் செய்யப்படும் ஆட்சியர்களாலும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 9 சங்கங்களில் தேர்தல் நடத்தப்பட்டு பின்னர் கலைக்கப்பட்டது.