தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் 1983 மற்றும் விதிகள் 1988ன் படி வகுக்கப்பட்டுள்ள விதிகளின்படி இணையம் மற்றும் முதன்மை சங்கங்கள் ஆகிய இரண்டு வகை சங்கங்களையும் மேற்பார்வையிடுவது கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் (வீட்டுவசதி) முக்கிய பணியாகும்.
➢ இவர் துறையின் நிர்வாக அலுவலராவார்.
➢ 11 மண்டலங்களில் 11 மண்டல துணைப்பதிவாளர்கள் (வீட்டுவசதி) உள்ளனர்.
➢ சென்னை பெருநகர கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் உள்ள ஒரு துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) பணியிடத்தில் அரசாணையின்படி 2024 முடிய பணி நீட்டிப்பு பெறப்பட்டு ஒரு ஓய்வுப் பெற்ற துணைப்பதிவாளர் பணிபுரிந்து வருகிறார்.
➢மனைத்திட்டங்கள் செயல்படுத்த அங்கீகாரம் வழங்குதல்
➢ கடன் வழங்குதல் மற்றும் வசூல்.
➢ நிர்வாக செயல்பாடுகள் –
● புதிய சங்கங்களை பதிவு செய்தல்
● சங்கங்கள் மேலாண்மை மற்றும் மேற்பார்வை
● சங்கங்களை கலைத்தல்
➢ சட்டப்பூர்வ பணிகள்
● பிரிவு 81 கீழ் விசாரணை மற்றும் பிரிவு 82 கீழ் ஆய்வுக் உத்தரவிடுதல் மற்றும் தொடர்நடவடிக்கை, பிரிவு 87-ன் கீழ் தண்டத்தீர்வை, தாவா மற்றும் நிறைவேற்று மனு
➢ நீதிமுறை சார்புடைய செயல்பாடுகள்
● மேற்முறையீடு, பரிசீலித்தல் மற்றும் சீராய்வு