திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரிமாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் அனுமதிக்கிணங்க திருப்பூர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் எண்.கே.1917, 1996-ஆம் ஆண்டு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (வீட்டுவசதி) அவர்களின் கட்டுப்பாட்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறையின் கீழ் துவக்கப்பட்டது. இக்கல்லூரி புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர். தியாகி குமரன் பெயரில் துவங்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகம், கோயமுத்தூருடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.


தரமான கல்வியை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, ஊக்கம் மற்றும் தியாகம் ஆகிய நற்பண்புகளை வளர்க்கும் விதமாகவும் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தியாவில், கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தால் நடத்தப்படும் பெண்களுக்கான முன்னோடி கல்லூரியாக இது மகத்தான முறையில் செயல்பட்டு வருகிறது.


இக்கல்லூரி நல்ல தரமான கல்வியை, கல்வி சார்ந்த அறிவாற்றல் மற்றும் திறன்களுடன் குறைந்த கட்டணத்தில் கிராமப்புர பெண்களுக்கு வழங்குகிறது