தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணைய தலைமை சங்கம்தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணைய தலைமை சங்கம் அனைத்து முதன்மை கூட்டுறவு சங்கங்களுக்கும் ஒரு தலைமை சங்கமாக மற்றும் முதன்மையான நிதி வழங்குனராக உள்ளது. 647 முதன்மை சங்கங்கள் TNCHF உடன் இணைக்கப்பட்டவையாகும்.

1991ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தாராளமயமாக்கல் சகாப்தம் வரை 644 எண்ணிக்கையில் தளவமைப்பு திட்டங்கள் முதன்மை தமிழ்நாடு வீட்டுவசதி சங்கங்களினால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு மாநிலத்தின் நகரமயமாக்களுக்கு வழிவகுத்தது.